உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பஸ்களில் ஏற்ற மறுப்பு அரூர் பயணிகள் புகார்

அரசு பஸ்களில் ஏற்ற மறுப்பு அரூர் பயணிகள் புகார்

அரூர்: சேலத்திலிருந்து, அரூர் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களில், தங்களை ஏற்ற, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பதாக பய-ணிகள் புகார் கூறுகின்றனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: சேலத்திலிருந்து, அரூர் வழியாக, வேலுார், சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும், 100க்கும் மேற்-பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரத்தில், அரூர் வழியாக, செல்லும் அரசு பஸ்களில், அரூர் செல்லும் பயணிகளை ஏற்ற, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பு தெரிவிக்-கின்றனர். காலியான இருக்கைகளுடன் பஸ்கள் சென்றாலும் கூட, அரூர் பயணிகளை ஏற்றுவதில்லை. மேலும், அரூர் பஸ் ஸ்டாண்ட் வராமல், பைபாஸ் சாலை வழியாக பஸ்கள் சென்று விடுகின்றன.இதனால், இரவு நேரத்தில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர், மிகவும் அவதிக்கு உள்ளாகி வரு-கின்றனர். எனவே, சேலத்திலிருந்து அரூர் வழியாக இயக்கப்-படும் அரசு பஸ்களில், அரூர் பயணிகளை ஏற்றிச்செல்ல அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை