உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

தர்மபுரி: அதியமான்கோட்டை, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2023--24 ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஸ்ரீதர்ஷினி, 590 மதிப்பெண்களும், சங்கவி மற்றும் முரளிபாபு, 589 மதிப்பெண்களும், கவுதம் மற்றும் மௌனீஸ்வரம், 588 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 590 க்கு மேல் ஒரு மாணவரும், 580 மதிப்பெண்களுக்கு மேல், 8 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல், 20 மாணவர்களும், 560 மதிப்பெண்களுக்கு மேல், 22 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ‍மேலும், 100க்கு 100 மதிப்பெண்கள் கணிதத்தில், 8 பேர், இயற்பியல், 5, வேதியியல், 1, கணினி தாவரவியல், 1, விலங்கியல், 1, உயிரியல், 1 என பெற்றுள்ளனர். இம்மாணவர்களை செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், பொறுப்பாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ