உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விபத்தில் சிக்கியவரை ஜி.ஹெச்.,க்கு அனுப்ப உதவிய பா.ம.க., - எம்.எல்.ஏ.,

விபத்தில் சிக்கியவரை ஜி.ஹெச்.,க்கு அனுப்ப உதவிய பா.ம.க., - எம்.எல்.ஏ.,

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, கடகத்துார் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி, 47. இவர் தன் ஸ்பிளன்டர் பைக்கில் கடகத்துாரில் இருந்து தர்ம-புரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரி நான்கு ரோடு அருகே, அவரின் பைக் முன் நாய் குறுக்கே வந்ததில் அந்-தோணி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அப்போது அவ்வழி-யாக வந்த, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் அவரை மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின், அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்க மருத்துவர்களை வலியுறுத்தினார். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அந்தோணியிடம் நலம் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை