உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்...

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்...

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், பி.பள்ளிப்பட்டி, பொம்-மிடி, பூதநத்தம் ஆகிய, 3 ஊராட்சிகளுக்கும், பி.பள்ளிப்-பட்டி சமுதாய கூடத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் கிராமப்புற மக்களுக்கு, 18 அரசு துறைகள் மூலம், 44 வகையான சேவைகள் தொடர்பாக, பாப்பிரெட்டிப்-பட்டி பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், துணை பி.டி.ஓ., கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மக்களிடம் மனுக்களை பெற்-றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டாக்டர் முருகன், திருமலாதினேஷ், ஊராட்சி செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோன்று, கடத்துார் ஒன்றியம் மணியம்பாடி, ஓசஹள்ளி, நல்லகுட்லஹள்ளி, ஓபிளிநாய்க்கனஹள்ளி ஆகிய ஊராட்சிக-ளுக்கு, ஒடசல்பட்டி சமுதாய கூடத்தில் முகாம் நடந்தது இதில், உதவி திட்ட அலுவலர் சஞ்சீவிகுமார், கடத்துார் பி.டி.ஓ.,க்கள் கலைச்செல்வி, மீனா, பங்கேற்று, 645 மனுக்களை பெற்றனர். முகாமில் ஒன்றிய குழு தலைவர் உதயா, ஊராட்சி மன்ற தலை-வர்கள் ஆறுமுகம், மஞ்சுளா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி