உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தாமோதிர பெருமாள் சுவாமி கோவில் தேர் திருவிழா

தாமோதிர பெருமாள் சுவாமி கோவில் தேர் திருவிழா

நல்லம்பள்ளி: எர்ரப்பட்டி தாமோதிர பெருமாள் சுவாமி தேர்திருவிழா, 9 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எர்ரப்பட்டியில், தாமோதர பெருமாள் சுவாமி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இதில், தேர்த்திருவிழா நிகழ்ச்சி கடந்த, 7- அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 8ல் தாமோதிர பெருமாள் சுவாமி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், பக்தர்கள் விரதமிருந்து மேல்விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, தாமோதிர பெருமாள் சுவாமி திருத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் பெருமாள் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதில், எர்ரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ