உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மான் வேட்டையாடியவர் கைது

மான் வேட்டையாடியவர் கைது

அரூர் : அரூர் காப்புக்காடு புளியன்தோப்பு சரகத்தில் கடந்த, 10ல் இரவு சோளக்கொட்டாயை சேர்ந்தவர் சிவன், 48, மற்றும் எருக்கம்பட்டி சேட்டு, 50; இவர்கள் மான் வேட்டையாடி, அதன் இறைச்சியை சோளக்கொட்டாய் அல்லிமுத்து என்பவர் மூலம், பாப்பாரப்பட்டி பகுதியில் விற்றுள்ளனர். இதனால் பாலக்கோடு வனச்சரகத்தில், அல்லிமுத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிவன், சேட்டு இருவரையும் மொரப்பூர் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்தபோது தலைமறைவாகினர். கடந்த, 23ல் மொரப்பூர் வனத்துறையினர் மற்றும் தர்மபுரி வனப்பாதுகாப்பு படையினர் சிவனை பிடித்தனர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுரைப்படி சிவனை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பைக், கத்தி, டார்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ