தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 213 மி.மீ., மழை பெய்துள்ளதால் விவ-சாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை வெப்பம் அதி-கமாக இருந்தது. இந்நிலையில், மாலை நேரத்தில் கருமேக கூட்-டங்கள் ஒன்று சேர்ந்தது. இரவு, 8:00 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் லோசான சாரல் மழை பெய்ய துவங்கியது. 10:00 மணிக்கு பலத்த காற்று வீசியதால், சில பகுதிகளில் பல மணி-நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, பலத்த மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்பட்டி, அதிகபட்ச-மாக தர்மபுரியில், 70 மி.மீ., பாலக்கோடு, 68, அரூர், 26, மாரண்-டஹள்ளி, 23, பென்னாகரம், 18, ஒகேனக்கல், 4, பாப்பிரெட்டிப்-பட்டி மற்றும் மொரப்பூரில் தலா, 2 என மொத்தம், 213 மி.மீ., மழையளவு பதிவானது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிடையந்துள்ளனர்.அரூரில்...அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 7:30 முதல், நேற்று காலை, 6:30 மணி வரை அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால் சூரநத்தம், நரிப்பள்ளி உள்-ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.