உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேர்தல் ஓட்டு எண்ணிக்கை:மதுபான கடைகள் மூடல்

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை:மதுபான கடைகள் மூடல்

தர்மபுரி;தர்மபுரியில் ஓட்டு எண்ணிக்கையையொட்டி, மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மூடப்படும்.இதுகுறித்து, கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும், 4ல், நடக்க உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூடி வைக்க வேண்டும். மேலும், முன்னாள் ராணுவ கேன்டீனில் உள்ள மதுபான கடைகளையும் மூடி வைக்க வேண்டும். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி