மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
2 hour(s) ago
முனியப்பன் கோவில் திருவிழா
2 hour(s) ago
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் அதிபன் சேர்ப்பு
2 hour(s) ago
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
30-Dec-2025
தொப்பூர்: தொப்பையாறு அணை பகுதியில், கட்டப்பட்டு வந்த தடுப்பு சுவர் பணிகள், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் பஞ்., உட்பட்ட தொப்பையாறு அணை பகுதி வழியாக, தொப்பூர் - பொம்மிடி பிரதான சாலை உள்ளது. இது, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. தொடர் மழையால், டிச., 11, 2022 ல் தொப்பையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அப்போது, அணை பகுதியிலிருந்த, தார்ச்சாலை மற்றும் சிறு பாலம், 2022 டிச., 23ல் உடைந்து நீரில் மூழ்கியது. அதை தொடர்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், அணையிலிருந்த பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட பின், உடைந்த சாலை பகுதியில், புதிய தடுப்பு சுவர் கட்ட, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, 2023 மார்ச், 25ல் பூமி பூஜை செய்து, பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பின் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.தடுப்பு சுவர் முழுமையாக கட்டப்படாமல், சில இடங்களில் பாலங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதில், வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக தொடங்கி, தொப்பையாறு அணைக்கு தண்ணீர் வருவதற்கு முன், பணிகளை முடித்து, பாதுகாப்பான சாலையாக மாற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
30-Dec-2025