உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோட்டில் அ.ம.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறப்பு

பாலக்கோட்டில் அ.ம.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறப்பு

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அ.ம.மு.க., சார்பில், பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நகர செயலாளர் ஞானம் தலைமையில் நடந்தது. இதில், தலைமை நிலைய செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன், தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், தர்பூசணி, இளநீர், நீர்மோர், எலுமிச்சை ஜூஸ், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, துணை செயலாளர் ஏகநாதன், ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை