உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு பாடுபட வேண்டும்: முனுசாமி பேச்சு

வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு பாடுபட வேண்டும்: முனுசாமி பேச்சு

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி அருகே நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.வேப்பனஹள்ளி, சாமந்தமலை, குந்தாரப்பள்ளி, நாச்சிக்குப்பம் பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா. கடந்த, 2004ல், அ.தி.மு.க., ஆட்சியில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் உருவானது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், பர்கூர், கிருஷ்ணகிரியில் கலை, பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள், நீதிமன்ற வளாகங்களை உருவாக்கியவர் ஜெயலலிதா. ஊத்தங்கரை, ஓசூர், கெலமங்கலம் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., என கல்வி வளர்ச்சி, நீர் மேலாண்மை, தொழில் வளங்களை வழங்கியது அ.தி.மு.க., அரசு.ஆனால் அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களில் பெயர் பலகையை வைப்பது, தி.மு.க., அரசு. தோல்வி பயத்தில் கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுப்பது மத்திய பா.ஜ., அரசு. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்றும் பாடுபடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., என்பதை உணர வேண்டும்.நமது சாதனைகளை ஒவ்வொரு பகுதிகளிலும், வீடுகள் தோறும் எடுத்துக்கூறி, அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிக்காக கண் துஞ்சாது பாடுபட வேண்டும்.இவ்வாறு பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை