உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

ஆடி பண்டிகையில் மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று, ஆடிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன், அழிஞ்சி மரக்குச்சியில், தேங்-காயை கோர்த்து, பாசிப்பருப்பு, அவல், வெல்லம் உள்ளிட்டவை-களை சேர்த்து, தீயில் சுட்டனர். பின், அவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்ட பின், அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.2 வீடுகளில் 10 பவுன் நகை திருட்டுதொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே, சாமிசெட்டிபட்டியை சேர்ந்த மாதேஷ், 51; இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த மே, 1 அன்று அவரது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த, 5 பவுன் நகை திருட்டு போனது. அதேபோல், ஏலகிரி அடுத்த, போலம்பட்டியை சேர்ந்த பொட்டியம்மாள், 41. விவசாய கூலி. கடந்த மே, 1 அன்று இவ-ரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 5 பவுன் நகை திருட்டு போனது. புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை