தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட செந்தில் நகரில், அரசு ராஜாஜி நீச்சல்குளம் உள்ளது. இங்கு, பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீச்சல் பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி, 3ம் கட்ட நீச்சல் பயிற்சி, நாளை முதல், வரும் மே, 8ம் தேதி வரை, 12 நாட்கள் நீச்சல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. காலை, 7:00 முதல், 9:00 மணி வரை ஆண்களுக்கும், 9:00 முதல், 10:00 மணி வரை பெண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்களுக்கான பயிற்சி கட்டணம் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, 1,770 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சிக்கு வரும்போது, ஆண்கள், நைலான் ஜட்டி, ஸ்விம்மிங் கேப் அணிந்து வர வேண்டும். பெண்கள், டைட்ஸ், பனியன், ஸ்விம்மிங் கேப் அணிந்து வர வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.