உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உறைவிட பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பிரிவு உபசாரம்

உறைவிட பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பிரிவு உபசாரம்

பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உறைவிடப்பள்ளி இடைநின்ற மாணவிகளுக்காக செயல்படுகிறது. இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து, அடிப்படை கல்வியை கற்றுக் கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து கண்காணித்து, மேல் வகுப்பிற்கு செல்ல வழிவகை செய்கின்றனர். இப்பள்ளியில், 2017-18 கல்வி ஆண்டில், 6ம் வகுப்பில் சேர்ந்து, பிளஸ் 2 தேர்வு எழுதிய, 17 மாணவியரை பாராட்டும் வகையில், பிரிவு உபசார விழா, நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, சீட்ஸ் தொண்டு நிறுவன உரிமையாளர் சரவணன் தலைமை வகித்து பேசினார். இதில், வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, வட்டார கணக்காளர் ரவி, தலைமையாசிரியர் சாந்தி, ஆசிரியர்கள் சந்தோஷ்மேரி உட்பட பலர் மாணவியரை பாராட்டி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை