| ADDED : ஜூலை 18, 2024 01:51 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம் பசுவாபுரம் ஊராட்சியில் அம்பாலப்பட்டி, கந்தகவுண்டனுார், ஓசூர், சிவனஹள்ளி, ஆலமரத்துப்பட்டி, பசு-வாபுரம், ஆத்துார், சீனியம்பட்டி, இந்திராகாலனி ஆகிய கிரா-மங்கள் உள்ளன. இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்-கின்றனர். இக்கிராம மாணவ, மாணவியர் படிக்க கந்தகவுண்ட-னுாரில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி முன்பு பயணியர் நிழற் கூடம் உள்ளது. சிவனஹள்ளி, கந்தகவுண்டனுார் பகுதி மக்கள், பள்ளி மாண-வர்கள் இந்த பயணியர் நிழற்கூடத்தை பயன்படுத்தி வந்தனர். ஊராட்சி நிர்வாகம் இதை முறையாக பராமரிக்காததால் சுற்றிலும் செடிகள், முட்கள் வளர்ந்து முட்புதர்கள் மத்தியில் நிழற்கூடம் உள்ளது. இதனால் அங்கு நிற்க முடியாமல் மழை, வெயில் காலங்களில் பஸ் ஏற, மாணவர்கள் ரோட்டிலேயே நிற்க வேண்-டிய அவலநிலை உள்ளது. முட்புதர்கள் சூழ்ந்து மக்கள் பயன்ப-டுத்த முடியாத நிலையில், குடிகாரர்கள் கூடாரமாக அது மாறி விட்டது. எனவே, முட்புதர்களை அகற்றி, மக்கள் பயன்பாட்-டிற்கு கொண்டு வர, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.