மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
7 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
7 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
7 hour(s) ago
தர்மபுரி : தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 10க்கும் குறைவான விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின் விவசாயிகள் வருகை அதிகரித்து, நேற்று முன்தினம், 21 பேரும் நேற்று, 27 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 27 குவியல்களாக, 827 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்தனர். இது, 358 முதல், 540 ரூபாய் வரை சராசரியாக, 445 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 3.68 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 5,528 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago