உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி சாதனை

சரக விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி சாதனை

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடந்து வரும் மேசை பந்து போட்டிகளில், ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கவுதம் முதலிடமும், இரட்டையர் பிரிவில் கவுதம் மற்றும் சேகுவரன், 2ம் இடமும் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கெவின், 2ம் இடமும், இரட்டையர் பிரிவில் கெவின் மற்றும் இஜாஸ் முதலிடமும் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராம்கிஷோர் முதலிடமும், இரட்டையர் பிரிவில் ராம் கிஷோர் மற்றும் ராகவா முதலிடமும் பிடித்தனர். பெண்களுக்கான போட்டிகளில், 14 வயதுக்கு உட்பட்ட ஒற்றைய பிரிவில் மிஸ்பா முதலிடமும், இரட்டையர் பிரிவில் மிஸ்பா, சுபத்ராஸ்ரீ முதலிடமும் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சுமித்ரா முதலிடமும், இரட்டையர் பிரிவில் சுமித்ரா, அட்ஷயா முதலிடமும் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், தமிழ்மதி முதலிடமும், இரட்டையர் பிரிவில் தமிழ்மதி மற்றும் வர்ஷா முதலிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், திவ்யா ஆகியோரை பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு ஆனந்த பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை