மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
7 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
7 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
7 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி மற்றும் அரூரிலுள்ள அரசு ஐ.டி.ஐ., தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மற்றும் அரூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ., தொழிற் பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், 14 வயது முதல், 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பெண்களுக்கு, 14 வயது முதல் உச்ச வரம்பில்லை. இதற்கு கல்வி தகுதியாக, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்பியாள் பயிற்சிக்கு, 2 வருடமும், வெல்டர் பயிற்சிக்கு ஓராண்டு அனுபவமும் இருக்க வேண்டும். மேலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், மோட்டார் வண்டி டீசல் மற்றும் இயந்திர வேலையாள் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தகுதியுடையோர், www.skilltraining.tn.gov.inஎன்ற முகவரியிலுள்ள விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். பயிற்சியின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும், 750 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், பாட புத்தகம், வரைபட கருவிகள், விலையில்லா லேப்டாப், சீருடை, பஸ் பாஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94458 03042, 93617 45995 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago