உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.5 கோடியில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி ஆய்வு

ரூ.5 கோடியில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நாள்தோறும், 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இதற்காக, 5 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிகளை நேற்று பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க. --எம்.எல்.ஏ., கோவிந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது, கூடுதல் கட்டடம் தரமற்ற சிமென்ட் கலவை கொண்டு கட்டப்படுகிறது. கான்கிரீட் தரமற்றதாக போடப்படுகிறது. இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளேன். கலவையை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என, அங்கு பணியிலிருந்த ஒப்பந்ததாரரின் பணி மேற்பார்வையாளரிடம் கூறினார்.மேலும், அதுவரை பணிகள் செய்யக்கூடாது என, மருத்துவ அலுவலர் டாக்டர் அருணிடம் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ