உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டிரைவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியால் லாரியை ஓரமாக நிறுத்தியவர் உயிரிழப்பு

டிரைவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியால் லாரியை ஓரமாக நிறுத்தியவர் உயிரிழப்பு

ஓசூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த டி.காணிகரஹள்ளியை சேர்ந்தவர் குணசேகரன், 50, லாரி டிரைவர்; இவர் கடந்த, 22ல் கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து நொய்டாவுக்கு, 12 வீல் லாரியில், ஒயிட் பவுடர் ஏற்றி கொண்டு சென்றார். நேற்று காலை, 10:00 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், மேலுமலை பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தன்னால் லாரியை தொடர்ந்து இயக்க முடியவில்லை என்பதை உணர்ந்த டிரைவர் குணசேகரன், கட்டுப்பாட்டை இழந்து, லாரி மற்ற வாகனங்களில் மோதி விபத்து ஏற்படாமல் இருக்க, நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல் உடனடியாக, லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி