உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

டிராக்டர் கவிழ்ந்து இரு நண்பர்கள் பலி

தொப்பூர்:தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சுதாகர், 25; டிரைவர். இவரும், இவரது நண்பர், உம்மியம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன், 23, என்பவரும், நேற்று முன்தினம் இரவு தொப்பூர் அருகே உள்ள சந்திரநல்லுாரில் கிராவல் மண் லோடு ஏற்ற டிராக்டரில் சென்றனர்.சுதாகர் டிராக்டரை ஓட்டினார். கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு, நள்ளிரவு, 1:00 மணிக்கு தொப்பூர் நோக்கி சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர கால்வாயில் சுதாகர், கோவிந்தன் டிராக்டரில் ஏற்றிச் சென்ற கிராவல் மண்ணுக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி