உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தண்ணீர் பந்தல் தி.மு.க., திறப்பு

தண்ணீர் பந்தல் தி.மு.க., திறப்பு

தர்மபுரி: தர்மபுரியில், தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது.தமிழகத்தில், கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள, தண்ணீர் பந்தல், நீர்மோர் பந்தல் திறக்க, தி.மு.க., தலைமை அறிவுறுத்தியது. அதன்படி, தர்மபுரி, பஸ் ஸ்டாண்ட் அருகே தர்மபுரி, தி.மு.க., சார்பாக, தண்ணீர் பந்தல், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தண்ணீர், நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில், தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது, தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உட்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை