மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
4 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
4 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
4 hour(s) ago
அரூர்: அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், விவ-சாயிகளிடமிருந்து மிக குறைந்த விலைக்கு, இடைத்தரகர்கள் நெல் கொள் முதல் செய்வதால், விவசாயிகள் நஷ்டத்துக்கு உள்-ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகு-தியில், ஆண்டுதோறும் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்-யப்படுகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமி-ழக அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அரூர் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் துவங்காததால், தமிழக அரசு நெல்லுக்கு நிர்ணயித்-துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலையை விட, விவசாயிகளிடமிருந்து, இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குகின்றனர். இதனால், விவசா-யிகள் நஷ்டம் அடைகின்றனர். இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் செய்ய அரூரில், அரசு சார்பில், நேரடி கொள்முதல் நிலையம் துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த, 2021 ஜன., 20ல், வேளாண் மற்றும் நுகர்-பொருள் வாணிப கழக அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் நெல் கொள்-முதல் நிலையம் அமைப்பது குறித்து, ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பிப்ரவரி இறுதியில், நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இதுவரை திறக்கப்படவில்லை. அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் எ.டி.திருமலை: அரூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம், 14 டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அரூர், மொரப்பூர், தீர்த்-தமலை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், 300க்கும் மேற்-பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளதால், தினமும், குறைந்த-பட்சம், 70 டன் நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்யலாம். நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிக-ளுக்கு, 75 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்றுக்கு, 400 முதல், 500 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. சந்தப்பட்டி, எஸ்.ஆர்.அழகு: நெல் நடவு, களை எடுத்தல், பூச்-சிக்கொல்லி மருந்து என, ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு, 35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆனால், அரசு நிர்ணயித்துள்ள விலையை விட, விவசாயிகளிடமிருந்து, இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குகின்றனர். இதனால், ஏக்க-ருக்கு, 14 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, அரூரில் அரசு சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும் என கடந்த, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே விவசா-யிகள் சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் செய்ய அரூரில், அரசு சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago