உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டூவீலரில் 50 மதுபாட்டில் எடுத்து சென்ற 3 பேர் கைது

டூவீலரில் 50 மதுபாட்டில் எடுத்து சென்ற 3 பேர் கைது

அரூர்: அரூர் எஸ்.ஐ., நாகராஜ் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, அரூர்-சேலம் பைபாஸ் சாலையில், என்.என்.மஹால் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டி-ருந்தனர்.அப்போது, சந்தேகப்படும் படி டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் வந்த அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சக்திவேல், 25, என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர், சில்லரை விலையில், மதுபாட்டில்களை விற்பனை செய்ய, வெள்ளை நிற பையில், 7,000 ரூபாய் மதிப்புள்ள, 50 மதுபாட்டில்களை எடுத்து வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் மது-பாட்டில் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதே போல், அரூர் அடுத்த பறையப்பட்டியில் மது விற்ற வடிவு, 45, தாமரைகோழியம்பட்டி சுந்தரம், 60, ஆகிய இருவ-ரையும் மொரப்பூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ