உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இடைநின்ற 12 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற 12 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், பொ.மல்லாபுரம் உள்ளிட்ட பள்ளிகளில் பயின்று இடைநின்ற 12 மாணவ, மாணவியர் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.தர்மபுரி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பிரபாவதி, அரூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமகி-ருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் கொண்ட குழு, பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலா-புரம், மோளையானுார் ஆகிய உயர் நிலைப் பள்ளியில் பயின்று இடைநின்ற மாணவர்களை கிராமங்களில் தேடி சென்றனர்.இதில்காயத்திரி, ரீனா ஆகிய மாணவியரை, பொ.மல்லாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை நிர்-மலா முன்னிலையில் பிளஸ் 1 வகுப்பில் சேர்த்தனர். இதே போன்று, 12 மாணவ மாணவியர் பல்வேறு பள்ளி, கல்லுாரி-களில் சேர்க்கப்பட்டனர். இதில் ஏழு மாணவர்கள் கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இடைநின்ற மாணவர்களை சேர்க்கும் பணியில் குழுவினர் ஈடு-பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ