உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: போதை பொருள் கலாசாரத்தை கண்டித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத, தி.மு.க., அரசு ஆட்சியில், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். தமிழகத்தை போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், கட்சியின் அமைப்பு செயலாளர் சிங்காரம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், நகர செயலாளர் பூக்கடை ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ