உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பீஹார் தொழிலாளி மாயம்

ஒகேனக்கல்: பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் முன்னா, 30. இவர், பெரியாம்பட்டியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலித்-தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை தன் நண்-பர்கள், 8 பேருடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்தார். ஊட்டமலை பரிசல் துறை காவிரியாற்றில் நண்பர்களுடன் குளித்தார். அப்-போது முன்னா ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலின்படி சம்பவ இடம் வந்த ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் தீயணைப்-புத்துறையினர், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முன்னாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ