உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தர்மபுரி:ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது, பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில், 27 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மா.கம்யூ., கட்சியின் இரங்கல் கூட்டம், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று நடந்தது.இதில், மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருச்சுனன், மல்லிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் மல்லையன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிங்காரவேலு உட்பட பலர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரங்கல் உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை