உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார்த்திகை தீப திருவிழாவில் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கார்த்திகை தீப திருவிழாவில் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தர்மபுரி, கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, சிவன் மற்றும் முருகன் கோவில்களில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி டவுன் நெசவாளர் காலனியில் உள்ள மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை, பரணி தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து மாலை மஹாலிங்கேஸ்வரருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு கார்த்திகை மஹா தீபம் ஏற்பட்டது. அதேபோல், தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத மருதவானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மஹா தீபம் ஏற்பட்டது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை பரணி தீபமும், மாலையில் மஹா தீபமும் ஏற்பட்டது. சொக்கப்பனை கொளுத்திய பின், கோவில் வளாகத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மக்கள் தங்களது வீடுகளில் கார்த்திகை தீபமேற்றி வழிபட்டனர்.* மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டியிலுள்ள, பெரிய நல்லியம்மன் மற்றும் சின்ன நல்லியம்மன் கோவிலில், கார்த்திகை தீப விழாவையொட்டி, நேற்று காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கு பாறையில் பச்சை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. * அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள தீர்த்தகிரீஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று தீபம் ஏற்றப்பட்டது. அதே போல், அரூர் மாரியம்மன் கோவில் தெருவிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று காலை பரணி தீபமும், மாலையில் மஹா தீப கொப்பரையில், 150 கிலோ நெய், 300 மீட்டர் துணி திரி மூலம் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையை சுற்றி மேளதாளத்துடன் கிரிவலம் சென்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி