முனியப்பன் கோவில் திருவிழா15 கிராம மக்கள் பங்கேற்புதர்மபுரி: தர்மபுரியில் நடந்த துர்க்கல் முனியப்பன் கோவில் திருவிழாவில், 15 கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி அருகே, துர்க்கல் முனியப்பன் கோவில் உள்ளது. இதில், 2 ஆண்டுக்கு ஒருமுறை கோவில் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல், கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் கலந்த கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். அதேபோல், தர்மபுரியில் ஏரிக்கரை முனியப்பன் கோவில் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று திருவிழா நடந்தது.'குரூப் -4' தேர்வில்11,427 பேர் 'ஆப்சென்ட்'தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று நடந்த 'குரூப் -4' தேர்வில், 11,427 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர்.'குரூப் -4' தேர்வுக்காக, தர்மபுரி தேர்வு மையத்தில் தேர்வு எழுத, 20,797 பேர், அரூரில், 12,674 பேர், பாப்பிரெட்டிப்பட்டியில், 7,981, நல்லம்பள்ளியில், 6,130, பென்னாகரத்தில், 5,592, பாலக்கோட்டில், 5,106, காரியமங்கலத்தில், 4,350 பேர் என மொத்தம், 62,630 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதையடுத்து, தர்மபுரி தாலுகாவில், 59 தேர்வு மையங்கள் அரூர் தாலுகாவில், 34, பாப்பிரெட்டிப்பட்டி, 26, நல்லம்பள்ளி, 19, பென்னாகரம், 15, பாலக்கோடு, 12, காரிமங்கலத்தில், 10 தேர்வு தேர்வு மையங்கள் என மொத்தம், 175 தேர்வு மையங்களில், 228 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நேற்று நடந்தது. இதில், 11,427 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 51,203 பேர் தேர்வெழுதினர்.செல்லியம்மன் செல்லப்பன்கோவில் கும்பாபிஷேகம்காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, செல்லியம்மன் செல்லப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பந்தாரஹள்ளி பஞ்., மண்ணாடிப்பட்டியில் செல்லியம்மன் செல்லப்பன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜை, புனித நீர் வழிபாடு, கோபுர கலசம் நிறுவுதல் முதல் கால யாக பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை திருப்பள்ளியெழுச்சி, 2ம் கால யாக பூஜை ஆகியவை நடந்தது.நேற்று காலை, 8 மணிக்கு மேல் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, செல்லப்பன் கோவில் கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.3 குழந்தைகளின் தாய் மாயம்போலீசில் கணவர் புகார்பாப்பிரெட்டிப்பட்டி-போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சின்னமுருகன், 40; இவர் கடந்த, 25 ஆண்டுகளாக ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அமுல், 34. இவர் ஊர் ஊராக பேன்சி பொருட்கள் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு, 3 ஆண் குழந்தைகள். வழக்கம் போல தொழில் பார்க்க கடந்த, 3ல் சின்ன முருகனும், மனைவி அமுலும் பொம்மிடிக்கு வந்தனர்.அப்போது அமுல்வை ரேகடஹள்ளி கிராமத்தில் இறக்கி விட்டுவிட்டு, சின்ன முருகன் பொம்மிடிக்கு ஜோதிடம் தொழில் பார்க்க சென்றார். பின் முடித்து விட்டு அவரது மனைவிக்கு போன் செய்தபோது, போன் 'சுவிட்ச் ஆப்' என வந்துள்ளது. பொம்மிடியிலிருந்து ரேகடஹள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பல இடங்களிலும், உறவினர்களிடம் தேடியும் கிடைக்கவில்லை. பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.