உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர் சேர்க்கை ரத்து பெற்றோர் போராட்டம்

மாணவர் சேர்க்கை ரத்து பெற்றோர் போராட்டம்

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி மாதிரி பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை ரத்து செய்தால், பெற்றோர் நேற்று பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை மாதிரி பள்ளி (ஆங்கில வழி கல்வி) கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில் மொத்தம் 240 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்தது. 59 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியான 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் வகுப்புக்கு சென்ற வந்தனர்.இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கையில் குளறுபடி நடந்திருப்பதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் மறு சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நேற்று மாணவர்கள் சேர்க்கை ரத்தை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மாவட்ட கல்வித்துறை உத்தரவின் பேரில் மீண்டும் சேர்க்கை நடக்கவுள்ளதால் தனக்கும் இதற்கும் எவ்வித தொடர்பு இல்லை' என பள்ளி தலைமையாசிரியர் ராமலிங்கம் தெரிவித்தார். உள்ளிருப்பு போராட்டம் செய்த பெற்றோர்களிடம் தலைமையாசிரியர் சமாதானம் செய்ததையடுத்து, மாணவர்களும், பெற்றோர்களும் கலைந்து சென்றனர். இது குறித்து சி.இ.ஓ., இளங்கோ கூறுகையில் ''மாணவர்களின் சேர்க்கை குறித்து புகார் வந்ததால், மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளது. முறையாக பரிசீலனை செய்யப்பட்ட பின் மாணவர்களின் சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை