உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் காயம்

சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் காயம்

தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நமலேரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரக்கு ஆட்டோவில் தர்மபுரி அடுத்த மாரண்டஹள்ளி முத்துகவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் வந்தனர். விழா முடிந்தபின் அனைவரும் சரக்கு ஆட்டோவில் வீடு திரும்பினர். மாரண்டஹள்ளி அடுத்த ஆத்துகொட்டாய் பகுதி வளைவில் சரக்கு ஆட்டோ திருப்பிய போது, ஆட்டோ கவிழ்ந்தத. இதில், ஆட்டோவில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாரண்டஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை