உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்ட ஹாக்கி போட்டி நிறைவு

மாவட்ட ஹாக்கி போட்டி நிறைவு

பாலக்கோடு: பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நிறைவு விழா நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், பால க்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி கள் நடந்து வந்தன. இதன் நிறைவு விழா, நேற்று இப்பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், 17 வயதிற்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான, 2 நாள் ஜூனியர் ஹாக்கி போட்டியை, ஹாக்கி யூனிட் இயக்குனர் ரங்கநாதன் துவக்கி வைத்தார். இப்போட்டியில், பாலக்கோடு, பேகாரஹள்ளி, நரிப்பள்ளி, அக்ராஹரம், வெங்கட்டம்பட்டி, அரூர் உள்ளிட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த, 7 அணிகள் விளையாடின. போட்டிக்கு, உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், குமார், பார்த்தீபன், ரவி, மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். 2 நாள் நடந்த பேட்டியின் இறுதி போட்டியில், பாலக்கோடு அணியும், பேகாரஹள்ளி அணியும் மோதின. இதில் பாலக்கோடு அணி, 5 கோல் அடித்து முதலிடம் பெற்றது. இவர்களுடன் மோதிய பேகாரஹள்ளி அணி கோல் எதுவும் அடிக்காமல், 2ம் இடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை