தர்மபுரி:''தி.மு.க.,
ஆட்சியில் இருந்த குறைந்த நாட்களில், தேர்தல் பத்திரத்தில் டாப் 10
வரிசையில் இடம் பெற்றுள்ளது. மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்தும்
பணம் பெற்றுள்ளனர்,'' என, பா.ம.க., வக்கீல்கள் சமூக நீதி பேரவை தலைவர்
பாலு கூறினார். தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டியில், பா.ம.க.,
வக்கீல்கள் சமூக நீதி பேரவை சார்பாக, லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனை
கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, பேரவை தலைவர் வக்கீல் பாலு
நிருபர்களிடம் கூறியதாதவது:தமிழகத்தில் வரும் லோக்சபா
தேர்தலில், பா.ம.க., இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக
இருக்கும். பா.ம.க., கூட்டணி இறுதியான பின், தற்போதைய கருத்து
கணிப்புகள் சுக்கு நுாறாக உடைக்கப்படும். தேர்தல் நேரத்தில், தி.மு.க.,
பல்வேறு தில்லு முல்லுகளில் ஈடுபடும். அதை தடுக்கவும், பா.ம.க.,
கூட்டணி வேட்பாளர்களை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக நடவடிக்கை
எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.தி.மு.க., ஆட்சியில்
இருந்த குறைந்த நாட்களில், தேர்தல் பத்திரத்தில் டாப் டென் வரிசையில்
இடம் பெற்றுள்ளது. மேலும், மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்தும்
அவர்கள் பணம் பெற்றுள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில், இரண்டு
தொகுதியில் மட்டும் போட்டியிட்ட கம்யூ., கட்சிகளுக்கு தி.மு.க., 25
கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது. பாட்டாளி மற்றும் தொழிலாளர்களின்
கட்சியாக கூறப்படும் கம்யூ.,கட்சிகளுக்கு இந்த தொகை எதற்காக
வழங்கப்பட்டது. வரும் லோக்சபா தேர்தல் நேர்மையாக நடக்க,
உச்சநீதிமன்றம் இது போன்ற, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அனைவருக்கும் தேர்தலில் உரிய பங்கு கிடைக்க வேண்டும். அதற்கு
நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.