உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆலம்பாடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 80, ஆடு மேய்த்து வந்தார். இவர், கடந்த, 14ல் மதியம், 2:00 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் ஆலம்பாடி தென்பெண்ணை ஆற்றின் ஏழு மதுரை முனியப்பன் கோவில் எட்டி மரத்து அடியில் தண்ணீரில் இறந்த நிலையில் வெங்கட்ராமன் கிடந்தார். அவரது உடலை மீட்டு, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ