உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனத்தில் யானை இறப்பு: 4 பேரிடம் விசாரணை

வனத்தில் யானை இறப்பு: 4 பேரிடம் விசாரணை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த, 2 நாட்களுக்கு முன், அழுகிய நிலையில், பெண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் இறந்த யானையின் உடலை உடற்கூறாய்வு அறிக்கை அடிப்படையில் விசாரணை செய்தனர். இதில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மற்றும் பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த, 4 பேரிடம் வனத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை