உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காலி பணியிடங்களை அதிகரிக்க பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

காலி பணியிடங்களை அதிகரிக்க பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

தர்மபுரி: பள்ளிகளில் காலி பணியிடங்களை அதிகரிக்க கோரி, பி.டி., பி.ஆர்.டி.இ., தேர்வர்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.அதில், அவர்கள் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பட்டதாரி ஆசி-ரியர், ஆசிரியர் பயிற்றுனர் தேர்வில், 37,000 பேர் தேர்ச்சி பெற்-றுள்ளோம். கடந்த, 10 ஆண்டுக்கு முன், டெட் தேர்வும் அதை தொடர்ந்து, நியமனத்தேர்வு, தமிழ் தகுதி தேர்வு ஆகிய, தேர்வு-களில் தேர்ச்சி பெற்றுள்ளோம். இந்நிலையில், பி.டி., பி.ஆர்.டி.இ., தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மே, 30 முதல் ஜூன், 2 வரை நடந்தது. இதில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3,192 என, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அறிவிக்-கப்பட்டது. இதனால், தகுதியும் திறமையும் வாய்ந்த எண்ணற்ற ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்ல முடியவில்லை. மேலும், கடந்த, 10 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர் பணியி-டங்கள் நிரப்பவில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர் காலி பணி-யிடங்களின் எண்ணிக்கை, 10,000 உயர்த்தி தகுதி தேர்வு, தமிழ் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை