உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் எஸ்.ஐ.க்கள்., சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் ஆகியோர், வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த மினி வேனை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார் துரத்தி சென்று மினிவேனை மடக்கினர்.மினி வேனை சோதனையிட்டபோது அதில், 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த தினேஷ், 30 என்பவரை கைது செய்து, குட்காவுடன், 65,000 ரூபாய் மற்றும் மினி சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை