| ADDED : ஆக 16, 2024 05:22 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் உழவர் சந்தையில், 200 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கினால், ஒரு கிலோ தக்காளி அல்லது அரை கிலோ பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தர்மபுரி மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) இளங் கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம் காரிமங்க லம் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள உழவர் சந்தையில், 16 கடைகள் இருந்தும், 8 கடைகள் மட்டுமே தினமும் இயங்குகிறது. இதனால், உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்ய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உழவர் சந்தையில், 200 ரூபாய்க்கு மேல் காய்கறி வாங்குவோருக்கு, ஒரு கிலோ தக்காளி அல்லது அரை கிலோ பெரிய வெங்காயம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து, இது தொடரும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.