உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 18 வயது நிரம்பாமல் ‍டூவீலர் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்குவது அதிகரிப்பு; கலெக்டர்

18 வயது நிரம்பாமல் ‍டூவீலர் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்குவது அதிகரிப்பு; கலெக்டர்

தர்மபுரி : ''தர்மபுரி மாவட்டத்தில், 18 வயது நிரம்பாமல் டூவீலர் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் சாந்தி பேசினார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 4 மாதத்தில் மட்டும், 509 சாலை விபத்து நடந்துள்ளது. இதில், 125 உயிரிழப்பு விபத்துகளில், 132 பேர் இறந்துள்ளனர். டூவீலரில் விபத்தில், 64 பேர் இறந்தும், 180 பேர் காயமடைந்தும் உள்ளனர். கடந்த, 4 மாதங்களில் நடந்த விபத்துகளில், 50 சதவீதம் டூவீலரில் சென்றவர்களால் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தில், 18 வயது நிரம்பாமல் ‍பைக் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்ட விபத்து, அவர்கள் பைக்கை இயக்கியதே காரணம். பெற்றோர்களும், தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, 18 வயது பூர்த்தியடையாமல் வாகனங்கள் ஓட்டக்கூடாது, போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். டூவீலரில் செல்வோர் அதிவேகமாக ஓட்டுவது மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், சப் கலெக்டர் கவுரவ்குமார், ஆர்.டி.ஓ.,க்கள் காயத்ரி, வில்சன்ராஜ்குமார், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை