| ADDED : ஜூலை 16, 2024 01:58 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், காமராஜரின், 122வது பிறந்தநாள் விழா, காங்., கட்சி சார்பில் நகர தலைவர் மாணிக்கம் தலை-மையில் நடந்தது. பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்-டது. தொடர்ந்து அங்கன்வாடி பள்ளிக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* அரூர் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்-பத்குமார் தலைமையில், காமராஜரின் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நிர்வாகிகள் சந்தோஷ், சிவன், பாஷா, அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அரூர் கச்சேரிமேட்டில், காங்., கட்சி சார்பில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதே போல், நாம் தமிழர், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்-வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் காம-ராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்-பட்டது.