உள்ளூர் செய்திகள்

கோகுலாஷ்டமி விழா

தர்மபுரி: கோகுலாஷ்டமியையொட்டி, தர்மபுரியிலுள்ள பல்வேறு கிருஷ்ணர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி அடுத்த அதகபாடி ராதே கிருஷ்ணா பிருந்தாவனத்திலுள்ள சுவா-மிக்கு நேற்று, பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்-தர்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* அரூர் என்.என்.மஹால் திருமண மண்டபத்தில், அரூர் இஸ்கான் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை, 7:00 முதல், மதியம், 2:00 மணி வரை துளசி பூஜை, மஹா அபி-ஷேகம், சொற்பொழிவு, ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாத விருந்து வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ