உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார் மோதி லாரி டிரைவர் பலி

கார் மோதி லாரி டிரைவர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் மாரியப்பன், 45. லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, தன் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் கடத்துாரில் இருந்து மணியம்பாடிக்கு சென்றார். மணியம்பாடி பெட்ரோல் பங்க் அருகே, தர்மபுரியில் இருந்து கடத்துார் நோக்கி வந்த சுசுகி ஈகோ கார், பைக் மீது மோதியது. இதில், மாரியப்பன் படுகாயமடைந்து பலியானார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ