மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
6 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
6 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
6 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டையில், பெண்கள் மட்டும் வடம் பிடித்த, முருகன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 21- ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, கோவில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. பெண்கள் மட்டும் வடம் பிடித்து, தேரை நிலை பெயர்த்தனர். இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, காலை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், 10,000 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதை, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் சின்னசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நேற்று மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று, ஞாயிற்றுக்கிழமை வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், நாளை விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், நாளை மறுநாள் சயன உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்கள், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago