உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவருக்கு வலை

அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவருக்கு வலை

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த நவலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தர்மபு-ரியை சேர்ந்த சிவசக்தி, 42, என்பவர் விலங்கியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், படிக்கும் வயதில் மாணவ, மாணவியர் காதலில் ஈடுபடக்கூடாது என, அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளார்.கடந்தாண்டு இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த நவலையை சேர்ந்த, 18 வயதுடைய முன்னாள் மாணவர், ஆசிரியர் சிவசக்-தியை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கடந்த, 5ல் பகல், 12:00 மணிக்கு நண்பர்களுடன் பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் மரக்கட்-டையால் ஆசிரியர் சிவசக்தியை தாக்கியுள்ளார். இதில் காயம-டைந்த அவர் புகார் படி, கம்பைநல்லுார் போலீசார் முன்னாள் மாணவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை