உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடத்துாரில் குடிநீர் இன்றி மக்கள் அவதி

கடத்துாரில் குடிநீர் இன்றி மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், கடத்துார் டவுன் பஞ்.,ல் 15 வார்டுகள் உள்ளன. ரத்தினம் பிள்ளை தெரு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவும் கடந்த, 20 நாட்களாக வழங்கப்படவில்லை. 1,000 ரூபாய் கொடுத்து, ஒரு லோடு குடிநீரை டிராக்டரில் வாங்கும் நிலை உள்ளது.இது குறித்து வார்டு கவுன்சிலர் மயில்சாமி கூறுகையில்,'' 15 வது வார்டு ரத்தினம் பிள்ளை தெருவில் கடந்த, பத்து நாட்களாக புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. இன்று அல்லது நாளை பணி முடிவடையும். பின், முழுமையாக மக்களுக்கு குடிநீர் சென்று சேரும்,'' என்றார்.பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர் கூறுகையில், ''ரத்தினம் பிள்ளை தெருவில், தற்போது புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால் அப்பகுதிக்கு, கடந்த ஏழு நாட்களாக குடிநீர் வழங்கவில்லை. உப்பு தண்ணீர் தினமும் வழங்கப்படுகிறது. புதிய குடிநீர் குழாய் அமைத்தவுடன் ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை