உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனத்தில் சிறு வன மகசூல் சேகரிக்க அனுமதி கோரி மனு

வனத்தில் சிறு வன மகசூல் சேகரிக்க அனுமதி கோரி மனு

வனத்தில் சிறு வன மகசூல் சேகரிக்க அனுமதி கோரி மனுதர்மபுரி, அக். 15-தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பழங்குடியின மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பென்னாகரம் அடுத்த, ஒகேனக்கல் பண்ணப்பட்டியில், இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கிறோம். இதில், நாங்கள் வனப்பகுதியில் சிறு வன மகசூல் எடுத்து, வாழ்க்கை நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த, 2 ஆண்டுகளாக காட்டிற்குள் செல்லக்கூடாது என, வனத்துறையினர் கூறி வருகின்றனர். மாவட்ட வன அலுவலர்கள், சிறு மகசூலை அனுபவிக்க உத்தரவு தெரிவித்த பின்னரும், ரேஞ்சர் எங்களை வனத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை. வன மகசூலை சேகரிக்க, 50 முதல், 60 கி.மீ., செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, வனத்தில் தங்கி, வன மகசூல் எடுக்க எங்களுக்கு, 3 முதல், 4 நாள் அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், காட்டிலுள்ள ஓடைகளில் மீன் பிடித்தாலும் வழக்கு போடுகிறார்கள். எனவே, வனத்தில் தங்கி சிறு வன மகசூல் சேகரிக்க, வன வளர்ப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், செம்மறியாடு கள் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை