உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பூசாரிகள் பேரமைப்பினர் கோரிக்கை மனு

பூசாரிகள் பேரமைப்பினர் கோரிக்கை மனு

தர்மபுரி: தர்மபுரி, கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பூசாரிகள் பேரமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும், 60,000 பூசாரிகளை உறுப்பினராக கொண்டு, பூசாரிகள் பேரமைப்பு செயல்பட்டு வருகிறது. வாழ்நாள் முழுவதும் கோவில்களில் திருப்பணியில் ஈடுபட்டு வரும் பூசாரிகளுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாத ஊதியமாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், 20 ஆண்டுகள் பூஜை செய்து, 60 வயது நிரம்பியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வூதியம், நலவாரிய அட்டை பெற வருவாய் சான்று கோருவதில் விலக்களிக்க வேண்டும். பூசாரிகள் நல வாரியத்தில், புதிய நலவாரிய உறுப்பினர்களை சேர்க்க, எளிய முறையில் செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஹிந்து சமய அறநியைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கு, பூஜை பொருட்கள் மற்றும் தீப எண்ணெய் வழங்க வேண்டும். கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ