உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொங்கல் வைத்து வழிபாடு

பொங்கல் வைத்து வழிபாடு

தர்மபுரி: தை மாதம் முதல் நாளான நேற்று, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பானையில் பொங்கல் வைத்தும், மஞ்சள் கொத்து, கரும்பு உள்ளிட்டவைகளை வைத்தும், சூரிய பகவானுக்கு மரியாதை செய்து பொங்கல் படையலிட்டனர். பின் பொங்கலை அருகில் வசிக்கும் உறவினர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். கோவில் மற்றும் குலதெய்வ சுவாமிக்கு படையல் மற்றும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல், தர்மபுரி டவுன் உழவர் சந்தையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். மேலும், தி.மு.க., மாநில வர்த்தகர் அணி செயலாளர் சத்தியமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் அசேக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ