உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி

கார் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி, கோழிமேக்கனுார் அண்ணா நகரை சேர்ந்த காணப்பன் மகன் அருண் கார்த்திக், 37; எம்.எஸ்.சி., எம்.எட்., பட்டதாரி. இவர், சின்ன மஞ்சவாடியில் உள்ள தனியார் பால் பண்ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு தனது பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார். அரூர் - சேலம் மெயின் ரோட்டில், காளிப்பேட்டை அருந்ததியர் காலனி அருகே செல்லும்போது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.அப்போது, சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த கார், பைக் மீது மோதியதில் அருண் கார்த்திக் நிலை தடுமாறி லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த அருண் கார்த்திக்கு ரம்யா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை